ஜேசன் மற்றும் சிக்மா படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சூரி
Soori talks about Jason Sanjay | தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் சமீபத்தில் சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்தும் படம் குறித்தும் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் சிக்மா. இயக்குநர் ஜேசன் சஞ்சய் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தளபதி விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சரின் மகன் என்பதன் காரணமாகவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். மேலும் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்தப் படத்தின் வெளியீடு வருகின்ற 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜேசன் மற்றும் சிக்மா படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சூரி:
அதன்படி நடிகர் சூரி பேசியதாவது, நான் தமிழ் குமரன் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது, ஜேசன் சஞ்சய் எனக்கு ‘சிக்மா’ (Sigma) படத்தின் கதையை விவரித்தார். சுந்தீப் கிஷனுடன் இணைந்து அந்தப் படத்தை இயக்குவதாகக் குறிப்பிட்ட அவர், எந்தவித கவனச்சிதறலும் இன்றி கதையை முழுமையாக என்னிடம் கூறினார். அந்த இரண்டரை மணி நேரமும், நான் தளபதி விஜய் அண்ணனிடம் பேசுவது போன்ற உணர்வை எனக்கு அளித்தது.
அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்; அவர் கதாநாயகனாக நடிக்க வேண்டும். அவர் மிகவும் அழகாக இருக்கிறார், கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று நான் தமிழ் குமரன் சாரிடம் கூறினேன். அவரை கதாநாயகனாக நடிக்குமாறு தான் வற்புறுத்தி வருவதாகவும், ஆனால் அவரோ இயக்குநராகும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தமிழ் குமரன் சார் தெரிவித்தார். ஜேசன் இயக்குநராகப் பணியாற்றுவதோடு, அதே வேளையில் கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
Also Read… நான் அந்த சூழலில் இருந்திருந்தால்… வைரலாகும் அம்பிகாவின் பேச்சு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Soori about #JasonSanjay and #Sigma ❤️🔥
“#JasonSanjay narrated the story of #Sigma to me when I went to TamilKumaran sir’s office. As he mentioned that he’s doing the film with #SundeepKishan, he told me the story fully without any distractions. Those 2.5 hours felt like I was…
— Movies Singapore (@MoviesSingapore) September 18, 2026