AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓக தாரா படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Aakasamlo Oka Tara Movie Release Update | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஓக தாரா. இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓக தாரா படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
ஆகாசம்லோ ஓக தாராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Sep 2026 13:38 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் துல்கர் சல்மான். இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஐ அம் கேம். மலையாள சினிமாவில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள ஆகாசம்லோ ஓக தாரா என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓக தாரா படத்தின் ரிலீஸ் எப்போது?

தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ஆகாசம்லோ ஓக தாரா படத்தை இயக்குநர் பவன் சடினேனி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மன் உடன் இணைந்து நடிகர்கள் சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசா மற்றும் ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படம் படம் வருகின்ற நவம்பர் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பெண்களை நிமிர்ந்து பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.. 20வது திருமண நாள் போட்டோவை பகிர்ந்த ஜோதிகா!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் – இயக்குநர் சீனு ராமசாமி

Follow Us