பெண்களை நிமிர்ந்து பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.. 20வது திருமண நாள் போட்டோவை பகிர்ந்த ஜோதிகா!
Jyotika and Suriya 20th Marriage: தென்னிந்திய சினிமாவில் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஜோடியாக இருப்பவர்கள்தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் தங்களின் 20வது திருமண நாளை முன்னிட்டு, வெளிநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் ரீல் மற்றும் நிஜத்திலும் பிரபலமான காதல் ஜோடியாக இருந்துவருபவர்கள் ஜோதிகா (Jyotika) மற்றும் சூர்யா (Suriya). இவர்கள் இருவருமே கடந்த 1999ம் ஆண்டில் இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் “பூவெல்லாம் கேட்டுப்பார்” (Poovellam Kettuppar) என்ற படத்தின் மூலமாக முதல் முறையாக ஜோடியாக இணைந்திருந்தார். இந்த படமே இவர்கள் இருவருக்குள்ளும் முதல் அறிமுகத்தை கொடுத்தது. இந்த படம் இவர்களுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்திருந்தது. இதற்க்கு பின் காக்க காக்க (Kaakha Kaakha), பேரழகன், மாயாவி என பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதில் காக்க காக்க படத்தின் போதே இவர்களுக்கு காதல் மலர ஆரம்பித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கியிருந்தனர். மேலும் இவர்கள் இருவரின் காதல் கடந்த 2006ம் ஆண்டில் செப்டம்பர் 11ம் தேதியில் திருமண வாழ்க்கையில் இணைந்தது. மேலும் இதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்த ஜோதிகா, கிட்டத்தட்ட 10 வருடங்களாக தனது குழந்தைகளுக்காக செலவிட்டார்.
இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த 2006ம் ஆண்டில் இவர்கள் இருவருமே 20வது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். தங்களின் 20வது திருமண நாளில் கிறிஸ்தவமுறைப்படி வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில், புகைப்படங்களை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!
20வது வருட திருமண நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஷூட் பதிவை வெளியிட்ட ஜோதிகா :
View this post on Instagram
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த காதல் ஜோடிகளின் முக்கியமானவர்களாக திகழ்ந்துவருகின்றனர். இவர்கள் இருவருமே கடந்த 2006ம் ஆண்டிலே திருமணம் செய்த நிலையில், கிட்டத்தட்ட 20வது ஆண்டுகளாக தங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருந்துவருகிறது. இவர்கள் இருவருமே தற்போதுவரைக்கும் ரசிகர்களுக்கு நெருக்கமான ஜோடியாக இருக்கிறார்கள். இதில் சூர்யா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற ஐயக்குநர்களுடன் பணியாற்றிவருகிறார்.
இதையும் படிங்க: ராயன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்
ஆனால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் ஜோதிகா தமிழில் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. இவர் தற்போது இந்தி சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஆனாலும் தனது கணவருடன் தமிழ் சினிமாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவருமே சமீபத்தில் தங்களின் 20வது வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடியிருந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.