பிக்பாஸ் தமிழில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஷமா – ஜேசன்… வெளியானது கலேபர வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 10-வது நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தொடர்ந்து வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தற்போது மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது முடிவடையும். இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த செப்டம்பர் மாதமே தொடங்கியது. இதன் காரணமாக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதமே முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் காமென் மேன் என்ற நிகழ்ச்சியில் போட்டியிட்டனர்.
இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட காமென் மேன்கள் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 4 பேர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன், ஷமா, முனியம்மா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.




பிக்பாஸ் தமிழில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஷமா – ஜேசன்:
இவர்கள் 4 பேரும் காமென் மேன் நிகழ்ச்சியில் போட்டியிட்டது மட்டும் இன்றி தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடுமையாக போட்டியிடுகின்றனர். முதலில் வாக்குவாதமாக மட்டுமே இருந்த இவர்களின் போட்டி தற்போது கைகலப்பாக மாறும் வகையில் சென்று கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் ஷமா மற்றும் ஜேசன் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து உள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே மோதலைப் பார்த்து மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்பதும் அந்த வீடியோவில் தெரிகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது… தந்திரமாக ஆடும் பெண்கள் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day10 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/NhG2IlRJcf
— Vijay Television (@vijaytelevision) September 16, 2026
Also Read… தனுஷின் 56-வது படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்