பிக்பாஸில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆனந்தி – லக்ஷ்மி பிரியா… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொங்கி தற்போது 8 நாட்கள் முடிவடைந்து 9-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே சண்டை நடைபெறும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நோக்கம் என்பதே மக்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணத்திற்கு தீனி போடுவதே ஆகும். அதன்படி உலக மக்கள் பெரும்பாலானோருக்கு மற்றவர்களின் சண்டைகள் மட்டும் சொந்த விசயங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஏன் நம்மளில் அதிகப்படியானோர் நமது பக்கத்து வீட்டில் சண்டை நடந்தால் அதனை நின்று வேடிக்கை பார்த்து உள்ளோம் என்பதே உண்மை. அப்படியான குணத்திற்கு தீணி போடும் விதமாக உருவானது தான் இந்த ஷோ. இந்த நிகழ்ச்சியில் பல குணங்களை உடைய மனிதர்களை ஒன்றாக ஒரே வீட்டில் வைத்து அவர்களின் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள்ளே பல போட்டிகள் நடத்தி அவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி குழு. இதில் சிலர் நண்பர்களாக ஆகி இருந்தால் பலர் பகையாளிகளாக உருவானதே அதிகம்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பல விசயங்களை உருவாக்கி வீட்டில் உள்ளவர்களிடையே போட்டி மனப்பான்மையை அதிகரிக்க நிகழ்ச்சி குழு பல திட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால் ஒன்னுமே இல்லாத விசயத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சண்டையிட்டு கொள்வது வீடியோவாக தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




பிக்பாஸில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆனந்தி – லக்ஷ்மி பிரியா:
அந்த வகையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 9-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் கிட்சனில் சமைப்பதற்கு காய்கறி வெட்டுவதில் போட்டியாளர்கள் ஆனந்தி மற்றும் லக்ஷ்மி பிரியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது இருவருக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day9 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/E5nLxi87ME
— Vijay Television (@vijaytelevision) September 15, 2026
Also Read… பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த நடிகை ஆனந்தி – போட்டியளர்களிடையே சலசலப்பு