ஆரமிக்கலாமா?.. முடிச்சிரலாமா..! கானா இசையில் கதையில்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர் வெளியீடு!
Meesaya Murukku 2 Trailer: தமிழ் மக்கள் மத்தியில் இசையமைப்பாளராக மிகவும் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் இசையமைப்பில் தமிழில் பல படங்கள் வெளியான நிலையில், ஹீரோவாகவும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரின் இயக்கம், நடிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மீசையமுறுக்கு 2. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி-யின் (Sundar C) இயக்கத்தில் வெளியான ஆம்பள (Aambala) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Aadhi). இவர் இந்த படத்திற்கு முன் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவந்தார்.விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த நிலையில், பின் சுந்தர் சியின் தயாரிப்பில் வெளியான மீசையமுறுக்கு (Meesaya Murukku) படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த படமானது சிறப்பான காதல் மற்றும் இசையை நோக்கிய இளைஞனின் பயணம் தொடர்பான கதைக்களத்தில் வெளியானது. இந்த படத்திற்கு பின் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டுள்ள புது படம்தான் மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku 2). இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்க, ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இதில் அவர் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: மண்டாடி மாபெரும் ஹிட்… கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கிய படக்குழு!
மீசையமுறுக்கு 2 படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
To wake a generation up to bigger dreams and louder moves 🤘🏾🔥
Watch #MeesayaMurukku2 trailer ▶️
🔗 https://t.co/4rThnDQuYU #MM2FromSept25 #ConcertInTheatres #HiphopTamizha @hiphoptamizha @RamyaRanganathn @khushsundar #AvniCinemax @benzzmedia #ACSArunKumar #AnanditaSundar… pic.twitter.com/f0oczmMvyP
— Saregama South (@saregamasouth) September 12, 2026
மீசையமுறுக்கு 2 படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
மீசையமுறுக்கு 1 படமானது இசை மற்றும் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து அப்படியே மாற்றாக மீசையமுறுக்கு 2 படமானது இசையை மட்டுமே மெய்யமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்த படமானது கானா இசையமை மையமாக கொண்டு, அந்த இசையின் மீது உள்ள அவிப்பிராயத்தை மாற்றும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்ஷ்ன், காதல் மற்றும் இசை போன்ற கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது ட்ரைலரில் தெரிகிறது.
மீசையமுறுக்கு 2 படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கெட்டிகா சர்மா, நீக் பட பிரபல நடிகை ரம்யா ரங்கநாதன் மற்றும் தெலுங்கு நடிகை சைத்ரா ஆச்சார் போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டங்களுக்கு நடுவே சத்தமே இல்லாத கூட்டம்.. போட்டியாளர்களை வெளுத்துவாங்கப்போகும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!
மேலும் இதில் ஹர்ஷத் கான் மற்றும் கருணாஸ் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆனது செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.