Meesaya Murukku 2: ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது ‘கோயிந்தம்மா’ பாடல்!
Meesaya Murukku 2 Movie Goindhamma song: தமிழில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள புதிய திரைப்படம் மீசைய முறுக்கு 2. இப்பத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கோவிந்தம்மா என்ற மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Adhi) . இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி (Sundar C) திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் படங்களில் நடித்துவருகிறார். தமிழில் 2017ம் ஆண்டில் வெளியான மீசைய முறுக்கு (Meesaya Murukku) என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகியிருந்தார். தனது சொந்த கதை மற்றும் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் கடந்த 1 வருடமாக பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற நிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் மீசைய முறுக்கு 2 (Meesaya Murukku 2).
இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள நிலையில், குஷ்புவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் ஏற்கனவே இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது சிங்கிளாக “கோயிந்தம்மா” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என் இனிய பொன் நிலாவே… இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது – நீதிமன்றம் பரபரப்பு கருத்து
மீசைய முறுக்கு 2 படத்தின் கோயிந்தம்மா பாடல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Tiger Siva 🐅 oda oru Gaana Atti Podalamaa? 💥
Listen to #Goindhamma from #MeesayaMurukku2 🔥
🎶 @hiphoptamizha
🎙️ @hiphoptamizha @iamkaushikkrish #GanaVinod #GanaUlagamDharani #GanaSudhakar
✍️ @hiphoptamizha #ACSArunKumar @khushsundar… pic.twitter.com/J9qDrYxCji— Saregama South (@saregamasouth) May 21, 2026
இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க அவருடன் கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஆச்சார் மற்றும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர் மற்றும் ராமயா ரங்கநாதன் உள்ளியட்டை பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை மொத்தமாக மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. ஆரா 10/10, லெட்சுமி மற்றும் கோயிந்தம்மா போன்ற பாடல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் இது முதல்முறை – முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து
மீசைய முறுக்கு 2 படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த மீசைய முறுக்கு 2 படமானது முழுக்க மியூசிக் சம்மந்தமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது கனா பாடல், ஹிப்ஹாப் பாடல் மற்றும் சென்னை வட்டாரங்களில் உள்ள பாடல்கள் பற்றிய கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.