AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அரசியலில் இது முதல்முறை – முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து

தமிழக அமைச்சரவையில் மே 21, 2026 இன்று அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

தமிழக அரசியலில் இது முதல்முறை – முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து
முதல்வர் விஜய் - இயக்குநர் பா.ரஞ்சித்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 May 2026 19:53 PM IST

சென்னை, மே 21 : தவெக ஆட்சியமைத்த நிலையில் கடந்த மே 10, 2026 அன்ற முதற்கட்டமாக முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் மே 21, 2026 இன்று 2 காங்கிரஸ் எம்எல்ஏகளுடன் மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அதில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். பட்டியலினத்தவர்கள் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பது தமிழ்நாட்டில் முதன்முறை என கூறப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

புதிதாக மே 21, 2026 அன்று தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கால்நடைத்துறை அமைச்சர் கமலி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜன், சிறு, குரு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தென்னரசு, உயர்கல்வித்துறை விஸ்வநாதன் ஆகியோர் பட்டியல் இன சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து

இது தொடர்பாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் மே 21, 2026 இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் எக்ஸ் பதிவு

 

பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை. கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.

இதையும் படிக்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் 3- ஆம் இடம்.. முதல்வர் விஜய் கருத்தை விளக்கிய பெ.சண்முகம்!

இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us