10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள்.. கலங்க வைத்த ஏரியில் மூழ்கி பலியான மாணவனின் தேர்வு முடிவுகள்!
10th Student Scored 495 Marks In 10th Public Examination | திருவள்ளூரை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர் ஒரு மாதத்திற்கு முன்பு ஆற்றில் மூழ்கி பலியாகினார். அவர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
கவரப்பேட்டை, மே 21 : திருவள்ளூரில் (Thiruvallur) ஏரியில் மூழ்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன், 10 ஆம் வகுப்பு தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் எடுத்துள்ள அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த மாணவர் ஏரியில் மூழ்கி பலியான நிலையில், 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று அவர் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாட திட்டத்தில் மொத்தம் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்று (மே 20, 2026) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழகத்தில் மொத்தமாக 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தில் 98.43 சதவீதம் மாணவர்கள், ஆங்கில பாடத்தில் 99.44 சதவீத மாணவர்கள், கணித பாடத்தில் 97.36 சதவீத மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 98 சதவீத மாணவர்கள், மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 97.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : “பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது”.. காவல் நிலையத்தில் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ கடும் வாக்குவாதம்!




500 – 495 மதிப்பெண் எடுத்த மாணவர்
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் அபிஷேக். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த இந்த மாணவர், ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏரியில் குளிக்க சென்ற நிலையில், ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவரின் தேர்வு முடிவுகளை உறவினர்கள் பார்த்த நிலையில், பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 உட்பட 20 பேர் அமைச்சர்களாகிறார்கள்!
அதாவது உயிரிழந்த அந்த மாணவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 99, அறிவியலில் 100 மற்றும் சமூக அறிவியலில் 98 என 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்று பள்ளியிலும் முதல் மாணவராக வந்துள்ளார். சிறந்த கல்வி எதிர்காலத்தை கொண்டிருந்த மாணவர், தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.