பெங்களூர் சாலையில் படமெடுத்து ஆடிய நாக பாம்பு.. அதிர்ச்சி சம்பபம்!
Cobra Snake Spotted On Bengaluru Road | கர்நாடகா மாநிலம், பெங்களூரு சாலையில் நாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியுள்ளது. அதனை கண்டு வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லாமல் அப்படியே நின்ற நிலையில், அங்கு சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு, ஜூலை 08 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) சாலையில் நாகம் ஒன்று படமெடுத்து ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாகம் சாலையில் படமெடுத்து ஆடிய நிலையில், அங்கு சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் பாம்பை பத்திரமாக அங்கிருந்து அகற்றியதால் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெங்களூரு சாலையில் படமெடுத்து ஆடிய நாகம்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பேலஸ் சாலையில் நேற்று (ஜூலை 07, 2026) மாலை நாக பாம்பு ஒன்று சாலையில் படமெடுத்து ஆடியுள்ளது. சாலையின் நடுவே நின்று அந்த பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்த நிலையில், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பாம்பை கடந்து செல்லாமல் அப்படியே நின்றுள்ளனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கேரளா வயநாட்டில் நிலச்சரிவு.. சிக்கியவர்கள் விவரம் அறிய அரசு தீவிரம்!
பாம்பால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
பாம்பு சாலையிலே நின்று படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாம்பை அங்கிருந்து பத்திரமாகா அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து சீராகியுள்ளது.
இதையும் படிங்க : டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள்.. சாதனைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி புகழாரம்!
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.