IND W vs ENG W: லார்ட்ஸ் டெஸ்டில் மோதும் IND W vs ENG W.. காயத்தால் நட்சத்திர வீராங்கனை விலகல்.. இந்திய அணி பின்னடைவு!
IND W vs ENG W Lords Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு (England Womens Cricket Team) இடையே வருகின்ற 2026 ஜூலை 10 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது. ஒரு நட்சத்திர வீராங்கனை காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும், லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானம், கடந்த 142 ஆண்டுகளில் ஆண்கள் கிரிக்கெட்டில் பல வரலாற்றுத் தருணங்களை கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த 2026 ஜூலை மாதம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் அணியும் (Indian Womens Cricket Team) பல சாதனைகளை படைக்கவுள்ளது. ஏனெனில், முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு (England Womens Cricket Team) இடையே வருகின்ற 2026 ஜூலை 10 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது. ஒரு நட்சத்திர வீராங்கனை காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: 7வது முறையாக சாம்பியன்! இங்கிலாந்தை வீழ்த்தி பட்டத்தை தூக்கிய ஆஸ்திரேலிய மகளிர்!
இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் செய்தியாளர் சந்திப்பில் முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில், ”இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான பிரதிகா ராவல், காயம் காரணமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். லார்ட்ஸில் விளையாட வேண்டும் என்ற அவரது கனவு தகர்ந்துள்ளதுடன், இது இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு” என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலாக அனுபவமிக்க வீராங்கனை பிரியா புனியா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.




டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் நேருக்குநேர் சாதனை:
டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 14 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 3 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 10 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 2023-ல் நடைபெற்றது. அப்போது, இந்திய அணி இங்கிலாந்தை 347 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ALSO READ: இந்திய அணிக்கு இத்தகைய நிலைமையா? 3 மோசமான சாதனைகள் படைப்பு!
இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரியா புனியா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நந்தினி ஷர்மா, ஹர்லீன் தியோல், க்ரண்கா கௌர், சினே ராணா.
இங்கிலாந்து மகளிர் அணி
நேட் சிவர்-பிரன்ட் (கேப்டன்), டாமி பியூமாண்ட், லாரன் பெல், மாயா பௌச்சர், ஆலிஸ் கேப்சி, டில்லி கோர்டின்-கோல்மன், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், கிரேஸ் பாட்ஸ், எல்லி த்ரெல்கெல்ட், மேடி வில்லியர்ஸ் மற்றும் இஸ்ஸி வோங்.