AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திண்டுக்கல்லில் கொடூரம்.. கூட்டு பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்… குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்!

Dindigul Minor Girl Gang Harassing: நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை 10- க்கும் மேற்பட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். இந்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 7 கூலி தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் கொடூரம்.. கூட்டு பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்… குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Jul 2026 22:00 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதையும், பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமிக்கு அழகான குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமி அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறப்பு

இதில், பலரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்பம் அடைந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியின் செல்போனை போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், பல கொடூரர்கள் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் படிக்க: ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்.. 3 பேருடன் சென்ற பைக் விபத்து.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளைஞர்!

7 கூலித் தொழிலாளர்கள் அதிரடி கைது

இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முத்தழகுபட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி ( 45 வயது), கிழக்கு ரத வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 55 வயது) என்பவர் உள்பட 7 கூலித் தொழிலாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குழந்தை திருப்பூர் பாதுகாப்பு மையத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. அந்த சிறுமி திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

10-க்கும் மேற்பட்டோர் கூட்டு வன்கொடுமை

சில இடங்களில் சிறுமிகள் மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் 10-க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சாலையோரம் நின்ற லாரி.. அதிவேகமாக வந்த R15 பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. அடுத்து நிகழந்த சோகம்!

Follow Us