தவெகவில் இணைகிறாரா ஓ.பி. ரவீந்திரன்.. ஓ.பி.எஸ்- இன் அடுத்தக்கட்ட அரிசியல் நகர்வு என்ன?
O.P. Ravindran Will Joining TVK: திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரன் அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு ஓ.பி.எஸும் க்ரீன் சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக உள்ள தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த முக்கிய தலைகள் இணைவது தான். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அரக்கோணம் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரன் தவெகவில் இணைவதாக வெளியாகி வரும் தகவல் தேனி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
தமிழக அரசியலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஏனென்றால், அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு வலியுறுத்தி வருவதே ஆகும். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இடம் கிடைக்காத காரணத்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரன் ஆகியோர் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த கட்சியை எதிர்த்து அதிமுக தொடங்கப்பட்டதோ அந்த கட்சியான திமுகவில் இணைந்தனர்.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி கைதில் இருந்து தப்பினார்.. குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன்!




திமுகவில் பெரிதளவு முக்கியத்துவம் இல்லை
இருப்பினும் தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டாது என்று பேசப்பட்டு வந்த நிலையில் தேனியில் ஓபிஎஸ் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அவரது முக்கிய நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் பலர் மாற்றும் முடிவுகளை முன்னெடுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தற்போது வரை எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவமோ, பதவியோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ரவீந்திரன்
இதன் காரணமாகவே தனது மகன் ரவீந்திரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு ஓ. பன்னீர் செல்வம் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரவீந்திரனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால், ஓபிஎஸ் அணியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்..