அம்மா உணவகங்களில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு!
Amma Hotels Upgradation In Tamil Nadu | மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய திட்டம் தான் அம்மா உணவகங்கள். இந்த உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, மே 21 : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Ex Chief Minister Jayalalitha) ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்களை (Amma Hotels) மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் (Tamil Nadu CM C Joseph Vijay) உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அம்மா உணவகங்களில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக சுமார் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவு திருப்திகரமாக இல்லை என்பது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு
எனவே அனைத்து அம்மா உணவகங்களிலும் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், சமையல் உபகரண பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை எந்தவித தங்கு தடையும் இன்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விஜய் படத்துடன் பதவியேற்ற தவெக எம்எல்ஏ.. “அவர் என்ன கடவுளா” என கண்டித்த புதுச்சேரி சபாநாயகர்!
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமான அம்மா உணவகங்கள்
ஏழை, எளிய மக்கள் பசியின்றி இருக்க அவர்களுக்கு மூன்று வேலையும் குறைந்த விலையில் உணவு வழங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் தான் அம்மா உணவகங்கள். அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி செய்த அரசுகள் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அம்மா உணவகங்களை மேம்படுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.