சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
YouTuber Savukku Shankar : தமிழகத்தில் பிரபல யூடியூ பர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் விடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
தமிழக அரசு மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் பரப்புவதாகவும், பழைய வழக்குகள் அடிப்படையிலும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர். அப்போது, இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை ஜாமினில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்
இந்த நிலையில், பணம் பறித்தல் மற்றும் பண மோசடி ஆகிய வழக்குகளின் அடிப்படையில் மீண்டும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், உடல்நல பிரச்சனை காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த ஜாமின் நிறைவடைந்த நிலையில், சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், ஆந்திர மாநிலத்தில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் படிக்க: வறுமையின் கொடும் பிடியும்.. பாட்டியின் பாசப் போராட்டமும்.. சேலத்தில் அரங்கேறிய துயரம்!!




சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டம்
அப்போது, சவுக்கு சங்கருக்கு ஆதரவான கும்பல் போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டூர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிரான தடுப்பு காவல் உத்தரவு தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் 1982- இன் கீழ் ஆலோசனை குழுவின் முன் வைக்கப்பட்டது.
குண்டர் தடுப்பு காவல் சட்டம் ரத்து
இதில், ஆலோசனை குழு, தடுப்பு காவலுக்கான காரணம், போலீசாரின் அறிக்கை, வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைதி சவுக்கு சங்கரின் வாய்மொழி விளக்கங்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், சவுக்கு சங்கரை சிறை காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று ஆலோசனைக் குழு கருத்து தெரிவித்தது. அதன்படி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான தடுப்பு காவல் சட்டப்பிரிவை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இரவோடு இரவாக போலீசார் நடத்திய வேட்டை.. 75 ரவுடிகள் கைது..