சென்னையில் இரவோடு இரவாக போலீசார் நடத்திய வேட்டை.. 75 ரவுடிகள் கைது..
சென்னை காவல்துறையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த சிறப்பு ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. தி.நகர் காவல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், முன் வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரவுடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us