AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கூட்ட நெரிசல்.. தவெக மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்..

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்.. தவெக மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 May 2026 07:39 AM IST

மே 20, 2026: தமிழகத்தில் புதிய அரசு கடந்த மே 10 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்ததிலிருந்து தற்போது வரை தினசரி பல்வேறு துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரின் இடமாற்றமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினசரி இந்த மாற்றங்கள் தொடர்பான அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

கரூர் சம்பவம் – 19 பேர் பணியிட மாற்றம்:

அந்த அடிப்படையில், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேரை தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த நகர் காவல் ஆய்வாளர் மணிவண்ணனும் இதில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் – நடந்தது என்ன?

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்வர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும் படிக்க: நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநர் இன்று சென்னை வருகை.. யார் யாருக்கு வாய்ப்பு?

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக, அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பணியிட மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Follow Us