தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை 9, 2026 இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூலை 9, 2026 நாளை முதல் ஜூலை 14, 2026 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 9 : தமிழகத்தில் ஜூலை 9, 2026 இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூலை 9, 2026 நாளை முதல் ஜூலை 14, 2026 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது எனவும் இதனால் ஜூலை 14, 2026 வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஜூலை 9, 2026 நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : ஓணம் பயணிகளுக்கு மகிழ்ச்சி… சென்னை–கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!
வானிலை மையத்தின் அறிவிப்பு
FISHERMEN WARNINGhttps://t.co/cAHkWzTg4J pic.twitter.com/b0c1Y0OLSu
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 8, 2026
ஜூலை 10, 2026 முதல் 12, 2026 தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஜூலை 13, 14 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 9, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!
மேலும், தமிழகத்தில் ஜூலை 8, 2026 நேற்று வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 9 செமீ, மேல் கூடலூர், குன்னூர், தேவாலாவில் தலா 8 செமீ, விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சியில் தலா 7 செமீ, பந்தலூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அதற்கேற்ப தயாராவது நல்லது.