AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் 8 மின்சார ரயில் சேவை இன்று ரத்து – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – விவரம் இதோ

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 8 மின்சார ரயில்களின் சேவை ஜூலை 9, 2026 இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 8 மின்சார ரயில் சேவை இன்று ரத்து – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jul 2026 07:01 AM IST

சென்னை, ஜூலை 9 : சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 8 மின்சார ரயில்களின் சேவை ஜூலை 9, 2026 இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த மின்சார ரயில் சேவையை நம்பியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் 8 மின்சார ரயில் சேவை இன்று ரத்து

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் ஜூலை 9, 2026 இன்றும், 0 ஜூலை 13, மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது ஈசி.. ஜூலை 11- இல் நடக்கும் பிரம்மாண்ட முகாம்.. முழு விவரம் உள்ளே!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, மாலை 3, 4.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மேலும், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கும், மறுமார்க்கமாக, தாம்பரத் தில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4, 5.24 ஆகிய நேரங்களில் கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரயில்களை நம்பியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிக்க : ஓணம் பயணிகளுக்கு மகிழ்ச்சி… சென்னை–கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

இதற்கிடையில் ஓணத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 31 வரை மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்(06125) ஜூலை 14 முதல் செப்டம்பர் 1 வரை எழும்பூரில் இருந்து மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே சிறப்பு ரயில்(06119) ஆகஸ்ட் 12,19,26 மற்றும் செப்டம்பர் 02 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து மதியம் 3.10 மணிக்கு இயக்கப்படுகிறது. கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்(06120) ஆகஸ்ட் 13,20,27 மற்றும் செப்டம்பர் 03 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு இயக்கப்படுகிறது

திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 12,19,26 மற்றும் செப்டம்பர் 02 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படுகிறது. தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்(06109) ஆகஸ்ட் 13,20,27 மற்றும் செப்.03 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 09) காலை 8 மணிக்கு தொடங்குகிறது இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us