AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் மீது அமெரிக்கா மிக கடுமையான தாக்குதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

America Brutally Attacked Iran | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட்டு சுமூகமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா, ஈரானை தாக்கியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மிக கடுமையான தாக்குதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
ஈரான் தாக்குதல்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jul 2026 08:23 AM IST

ஈரான், ஜூலை 09 : ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மீண்டும் மிக கடுமையான தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் (Middle East) பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே மூன்று மாதங்களாக போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை எழுந்தது. இந்த நிலையில், ஈரான் உடனான அமைதி போர் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) நேற்று (ஜூலை 08, 2026) அறிவித்த நிலையில் அமெரிக்க, ஈரானை தாக்கியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த போர்

அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கு மேல் மிக கடுமையான போர் ஏற்பட்டது. இந்த போரின் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக, கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இது உலக நாடுகளில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : இந்தியா – இந்தோனேஷியாவின் நட்பு வலுவானது – பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ

அமெரிக்கா – ஈரான் இடையே நிலவிய இந்த போர் காரணமாக ஏராளமான பண இழப்பு, பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த நிலையில் தான் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஒருவழியாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை உன்பாடு எட்டியது. 6 மாதங்களுக்கு இந்த அமைதி பேச்சுவார்த்தை உடன்பாடு அமலில் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே வெடித்த மோதல்

கடந்த சில நாட்களாக ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து சுமூகமாக இருந்து வந்தது. ஆனால், நேற்று முன் தினம் (ஜூலை 07, 2026), மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இதன் காரணமாக தான் ஈரான் மீது தற்போது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி.. பிரதமர் பயணங்களில் கவனம் பெறும் கோயில் விசிட்ஸ்!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் உருவாகியுள்ள நிலையில் அது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us