இந்தியா – இந்தோனேஷியாவின் நட்பு வலுவானது – பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான நட்புறவை எடுத்துக்காட்டும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இந்தியா மற்றும் இந்தோனேஷியாவின் நட்பு வலுவானது" என்று குறிப்பிட்ட அவர், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் .
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான நட்புறவை எடுத்துக்காட்டும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இந்தியா மற்றும் இந்தோனேஷியாவின் நட்பு வலுவானது” என்று குறிப்பிட்ட அவர், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இந்தோனேசியா உறவுகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பாதுகாப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கல்வி, கனிம வளம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயணத்தின் போது, இந்தோனேசியாவின் உயரிய குடிமகன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியது.
பிரதமர் பகிர்ந்த வீடியோ
The India-Indonesia friendship is strong and vibrant! 🇮🇳 🇮🇩@prabowo pic.twitter.com/U57syfi670
— Narendra Modi (@narendramodi) July 8, 2026
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பாதுகாப்பு, வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம், கல்வி, உள்கட்டமைப்பு, கனிம வளம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மொத்தம் 20 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் உத்திசார் கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் தனது பயணத்தின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி, “இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான நட்புறவு வலுவாகவும் உயிரோட்டத்துடனும் உள்ளது” என்று குறிப்பிட்டார். இந்தோனேசியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு, இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை மற்றும் அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய காணொளி ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
பாதுகாப்புத் துறையில் முக்கிய முடிவுகள்
இப்பயணத்தின் போது பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் (சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வரும் இந்தோனேசியா, கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அஸ்த்ரா எல்லைக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் வாங்கவுள்ளது. இந்தோனேசியாவின் சுகோய்-30 போர் விமானங்களில் இந்த ஏவுகணைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உதவும். அத்துடன், உத்தி ரீதியாக மிக முக்கியமான சபங் துறைமுகத்தை கூட்டாக மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவின் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் மாதிரியைப் பின்பற்றி, இந்தோனேசியாவில் ‘ION’ என்ற டிஜிட்டல் வர்த்தக நெட்வொர்க் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையை இந்தோனேசியாவிலும் செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த முயற்சி, இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு வசதியான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதிகளை வழங்கும். *
இந்தோனேசியாவின் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, அந்நாட்டின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைப்பதில் இந்தியத் தேர்தல் நிபுணர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவார்கள் எஃகு, நிக்கல் மற்றும் அரிய வகை கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு அவசியமான ‘அரிய வகை நிரந்தர காந்தங்களை’தயாரிக்கும் ஆலைகளில் முதலீடு செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐஎம் பெங்களூரு இந்தோனேசியாவில் தனது முதல் சர்வதேச வளாகத்தை அமைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பனன் (Prambanan) கோயிலைப் புதுப்பிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.