தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தில் தமிழ் எழுத்துகள்
Tamil Inscription Found on Gold Ring : தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மோதிரத்தில் மிகப் பழமையான தமிழ் எழுத்து முறைகளில் ஒன்றான பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மோதிரத்தில் மிகப் பழமையான தமிழ் எழுத்து முறைகளில் ஒன்றான பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் மற்றும் பண்பாட்டு தொடர்பு இருந்தது தெரிய வருகிறது. .
2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தில் தமிழ் எழுத்துகள்
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டான் யாய் தோங் என்ற தொல்லியல் தளத்தில் இந்த மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த 2026 ஆண்டு தொடக்கத்தில் அப்பகுதியில் உள்ள நெல் வயலில் பழமையான வெண்கல பொருட்கள் கிடைத்த நிலையில், தாய்லாந்து தொல்லியல் துறை அங்கு முழுமையான அகழாய்வை தொடங்கியது.
இதையும் படிக்க : தொடரும் பதற்றம்.. ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. மீண்டும் போரா?
தமிழி எழுத்துகளுடன் தங்க மோதிரம்
Fresh discoveries point to Thai – Bharat Civilizational links
One may mock at Hindu way of seeing Akhand Bharat that spreads virtually entire South Asia of today. But, increasingly, archaeological evidence point to this expanse. Latest is 2,000-year-old gold ring engraved with an… pic.twitter.com/KwhsU4CLdf— Centre for Integrated and Holistic Studies (@cihs_india) July 8, 2026
கண்டெடுக்கப்பட்ட 2 மோதிரங்களில் ஒன்றில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் நிபுணர்களின் ஆரம்பகட்ட ஆய்வின்படி, அதில் புசரகிதசா என தெரியவந்துள்ளது. தமிழில் அலர் வைரதன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் இதன் பொருள் புஷ்யம் என்ற நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர் என்றும். கூறப்படுகிறது. இதே எலும்புக்கூட்டின் அருகே மற்றொரு எளிய தங்க மோதிரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித எழுத்துகளும் காணப்படவில்லை.
இதையும் படிக்க : இயற்கையை பாதுகாக்க நதியை திருமணம் செய்த பெண்.. தொடர்ந்து போராடி வருகிறார்!
பண்டைய இந்தியாவில் வணிகம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மோதிரமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வரலாற்று ஆய்வுகளின்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய வணிகர்கள் கடல் வழியாக தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகம் செய்து வந்தனர். அப்போது மிளகு போன்ற மசாலா பொருட்கள், மணிகள், நெய்த துணிகள், உலோகப் பொருட்கள் மட்டுமின்றி, மதம், கலாசாரம் மற்றும் எழுத்து மரபுகளும் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. டான் யாய் தோங் பகுதி தாய்லாந்தின் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் தளமாகக் கருதப்படுகிறது. இது சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.