AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்கப் டிரக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 11 வயது சிறுவன்.. 9 துறவிகள் பரிதாப பலி!

9 Monks Died In Road Accident | தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பிக்கர் டிரக் ஓட்டிச் சென்று சாலையில் நடந்து சென்றுக்கொண்டு இருந்த துறவிகள் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் மொத்தம் 9 துறவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிக்கப் டிரக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 11 வயது சிறுவன்.. 9 துறவிகள் பரிதாப பலி!
விபத்தை ஏற்படுத்திய கார்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jul 2026 21:11 PM IST

பாங்காக், ஜூலை 02 : தாய்லாந்தில் (Thailand) 11 வயது சிறுவன் பிக்கப் டிரக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், 11 பவுத்த துறவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித பயணம் சென்றுக்கொண்டு இருந்த துறவிகள் மீது சிறுவன் ஓட்டிச் சென்ற பிக்கப் டிரக் மோதியதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

11 வயது சிறுவன் ஓட்டிய வாகனத்தால் 9 துறவிகள் பரிதாப பலி

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் சில பவுத்த துறவிகள் புனித பயணமாக நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக 11 வயது சிறுவன் ஒருவர் பிக்கப் டிரக் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த டிரக் துறவிகள் மீது மோதியதில் 9 துறவிகள் பலியாகியுள்ளனர். மொத்தம் 35 துறவிகள் இந்த புனித பயணத்தை மேற்கொண்டு இருந்த நிலையில், வாகனம் மோதியபோது சம்பவ இடத்திலேயே 5 துறவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : கத்தார் பேச்சுவார்த்தை இழுபறி.. குழப்பத்தில் ஹோர்முஸ் சிக்கல்.. என்ன சொல்கிறது ஈரான்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 பேர்

படுகாயமடைந்த துறவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். மீதம் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடைபெறுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தான் அந்த குழு தங்களது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க : கொடூர வெயிலால் தொடரும் பலி.. இந்தியாவைவிட ஐரோப்பா அதிக பாதிப்படைவது ஏன்? காரணங்கள் இவைதான்!

போலீசாரின் விசாரணை வலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுவன்

விபத்தை ஏற்படுத்திய சிறுவன் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்த பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலையில் இருந்து விலகி தங்களது குழுவின் மீது மோதியதாக துறவிகள் கூறியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

அமைதி தேடி புனித பயணம் மேற்கொண்டு இருந்த துறவிகள் மீது வாகனம் மோதி அவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us