AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தின் உரிமைகளை மாற்றம் என்ற பெயரில் தாரை வார்க்க வேண்டாம்.. தவெக அரசு மீது உதயநிதி விமர்சனம்!

Udhayanidhi criticized Tvk Govt: தமிழகத்தில் மாற்றம் என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்க்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்தார். ஆளுனர் அர்லேகர் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்ட இந்த கருத்தை அவர் தனது அறிக்கையலி் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளை மாற்றம் என்ற பெயரில் தாரை வார்க்க வேண்டாம்.. தவெக அரசு மீது உதயநிதி விமர்சனம்!
மாற்றம் என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்க்க வேண்டாம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Jul 2026 21:45 PM IST

தமிழகத்தில் மாற்றம் என்ற பெயரில் மாநில உரிமைகளா தாரை வார்க்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேர ஆட்சியில் கவர்னர் ஆய்வு செய்தார் என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தான் நியமனப் பதவியில் அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழக ஆளுநராக இருப்பதை மறந்து மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியுள்ளார். அரசியலமைப்புக்கும், மாநில உரிமைக்கும் எதிராக இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கு, இதனை அனுமதித்த சோபா மாடல் அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பு தமிழக அரசிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது வைகை ஆற்றை அரசு சீரமைக்காவிடில் கவர்னர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பேசி உள்ளார். ஆளுநரின் இந்த அசட்டு துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாளாக தனமே, காரணம் ஆகும்.

சட்டசபையில் திமுவினர் எழுப்பிய கேள்வி

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டப்பேரவையில் திமுகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு, உரிய பதிலை சொல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், தற்போது ஆளுநரை ஆய்வு செய்ய அனுமதித்து விட்டு மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.

மேலும் படிக்க: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!

சட்டத்துக்கு புறம்பாக எம்எல்ஏக்களை கொள்முதல் செய்யும் தவெக

அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக மாற்றுக் கட்சிகளின் எம்எல்ஏக்களை அச்சுறுத்தி கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்து விடுவாரா என்ற நிலைப்பாட்டில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்டபோது அவர் சென்ற இடமெல்லாம் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம்.

மாற்றம் என்ற பெயரில் உரிமைகளை தாரை வார்க்க வேண்டாம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்தது கிடையாது. எனவே, தமிழகத்தில் மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை தாரை வார்க்காமல் ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையே உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவை முதுகில் குத்திய மதிமுக பொதுச்செயலர் வைகோ… டிடிவி தினகரனம் கண்டனம்!

Follow Us