AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: 2வது டெஸ்டிலேயே 10 விக்கெட்கள்.. வரலாற்று சாதனை படைத்த மானவ் சுதார்!

Manav Suthar 10 Wickets: காலி சர்வதேச ஸ்டேடியத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றார். இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மைதானத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

IND vs SL: 2வது டெஸ்டிலேயே 10 விக்கெட்கள்.. வரலாற்று சாதனை படைத்த மானவ் சுதார்!
மானவ் சுதார்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Aug 2026 14:55 PM IST

காலி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தியா – இலங்கை (IND vs SL) இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இளம் பந்துவீச்சாளர் மானவ் சுதாரின் (Manav Suthar) சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி, இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிய சுதார், காலியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்ததோடு, அந்த ஸ்டேடியத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். அவரைத் தவிர, வேறு இரண்டு இந்தியர்கள் மட்டுமே இந்த ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ALSO READ: முடியப்போகும் முதல் இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டி.. வெற்றி-தோல்விக்கு பிறகு புள்ளி பட்டியலில் என்ன மாற்றம் நிகழும்?

கலக்கிய மானவ் சுதார்:

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கானகரைச் சேர்ந்த மானவ் சுதார், கடந்த 2026 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதில், ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் உட்பட, மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடன் 3வது சுழற்பந்து வீச்சாளராக மானவ் சுதார் சேர்க்கப்பட்டு, தனது பந்துவீச்சில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உடாரா உட்பட 4 பேட்ஸ்மேன்களை மானவ் சுதார் ஆட்டமிழக்கச் செய்தார். நான்காம் நாளில் இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 19ம் தேதி ஐந்தாம் நாளில், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இப்போட்டியில் தனது 10 விக்கெட் சாதனையை நிறைவு செய்தார்.

காலியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர்:

காலி சர்வதேச ஸ்டேடியத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றார். இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மைதானத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மேலும், 3 மெய்டன் ஓவர்கள் உட்பட 45.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2.88 என்ற எகானமி ரேட்டைப் பராமரித்து, இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களைப் பதிவு செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் சுதார் பெற்றார்.

ALSO READ: மானவ் சுதார் அபாரம் – 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா:

இலங்கை அணி வெற்றி பெற 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாம் நாளில், தனஞ்சய டி சில்வாவும் சோனல் தினுஷாவும் ஒரு வலுவான தொடக்கத்தை அளித்ததால், இலங்கையை ஆட்டமிழக்கச் செய்வது கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ரவீந்திர ஜடேஜா அந்த பார்ட்னர்ஷிப்பை முறியடித்து, டி சில்வாவை (59) விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். பின்னர் தினுஷா தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். மேலும் சதத்தை எட்டும் நிலையில் இருந்தார். ஆனால், அதே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சுதாரிடம், 76-வது ஓவரில் 84 ரன்களில் தினுஷா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மானவ் சுதார், ஒரு முதல் தரப் போட்டியில் 4 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் மானவ், முதல் தர கிரிக்கெட்டில் 9 முறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Follow Us