ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்.. ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பார்த்த 1.20 கோடி பேர்.. அதிர்ச்சியில் படக்குழு!
Jana Nayagan Movie: முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த நிலையில், அந்த படத்தை 1 கோடியே 20 லட்சம் பேர் சட்டவிரோதமாக பார்த்துள்ளதாக அதிர்ச்சிகர தகவலை போலீசார் வெளியிட்டு உள்ளனர். இது குறித்த முழு விவரம்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தலுக்கு முன்னதாக நடித்த கடைசி படம் என்று கூறப்படும் ஜனநாயகம் படத்தை சட்டவிரோதமாக 1.20 கோடி பேர் இணையதளத்தில் பார்த்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் விஜய் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கிய ஜனநாயகம் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை என்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் வெளியிட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் திடீரென கசிய தொடங்கின. தொடர்ந்து, ஜனநாயகன் முழு படமும் இணையதளத்தில் கசிந்தது. இது தொடர்பாக, திரைப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஜனநாயகன்படத்தை இணையத்தில் கசிய விட்டதாக எடிட்டர் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயகன் படத்தை பார்த்த 1.20 கோடி பேர்
தொடர்ந்து, இந்த படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஷேர் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இணையத்தில் கசிந்த ஜனநாயகன்படத்தை 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கே. வி. என். புரொடக்சன்ஸ் அளித்த புகாரின் பேரில், 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை.. த.வெ.க வெற்றிப்பெற முழு மூச்சோடு உழைப்போம் – வைகோ திட்டவட்டம்..




ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இதில், ரஜினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் ஜனநாயகன் படம் கசிந்ததற்கான ஆதாரங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் புலன் விசாரணை தற்போது வரை முடிவடையவில்லை. எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக தலைமறைவாக இருந்து வரும் மேலும் இருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் மீதான தணிக்கை சான்றிதழ் கிடைப்பதை தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், போதும் படம் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில் விரைவில் ஜனநாயகன் படம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஜூலை 12ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு – அண்ணாமலை அறிவிப்பு..