இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை.. த.வெ.க வெற்றிப்பெற முழு மூச்சோடு உழைப்போம் – வைகோ திட்டவட்டம்..
தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதைத் தடுக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து கருத்து தெரிவித்த அவர், "தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத மிகப்பெரிய அரசியல் மோசடி நடைபெற முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
ஜூலை 2, 2026: தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக முழுமூச்சுடன் பணியாற்றுவோம் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில், அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதற்கு, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது.
த.வெ.க தலைமையில் புதிய கூட்டணி:
இந்தச் சூழலில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தை தலைமையாகக் கொண்ட புதிய கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பங்கேற்றார்.
மேலும் படிக்க: 1000 கார்கள், 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தவெக-வில் இணைய வந்த அதிமுக தொண்டர்கள்.. மகாபலிபுரத்தில் அலைமோதும் கூட்டம்..
தமிழகத்தில் தற்போது ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை:
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக முழுமூச்சுடன் பணியாற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதைத் தடுக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து கருத்து தெரிவித்த அவர், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத மிகப்பெரிய அரசியல் மோசடி நடைபெற முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.