AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்

புற்றுநோய் பாதிப்புகள் 2020ஆம் ஆண்டில் 68,750 ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022ஆம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 96,486 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2026 19:27 PM IST

ஆகஸ்ட் 18, 2026: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரிடையேயும் புதிதாக கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 78,678 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் 77,156 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள்: 

மேலும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டுக்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில் மாநிலத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நோய் பரவலின் தீவிரத்தையும், தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளையும் எடுத்துக்காட்டுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புகள் 2020ஆம் ஆண்டில் 68,750 ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022ஆம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 96,486 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்:

இந்த அதிகரிப்பு நோய்த் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திறன் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வலுவான பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க: நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..

சென்னையில் மட்டும் நடப்பு ஆண்டில் 8,555 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் 795 பாதிப்புகளும், வேலூரில் 6,525 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் அதிகளவில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாழ்க்கைமுறை சார்ந்த இடர்காரணிகள், காற்று மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் நோயை தாமதமாக கண்டறிதல் உள்ளிட்ட காரணிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்:

புற்றுநோய் பாதிப்பின் தன்மையும் பாலினத்தைப் பொறுத்து மாறுபடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக உள்ளது. இது பெரும்பாலும் புகையிலைப் பயன்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க: திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..

பெண்களைப் பொறுத்தவரையில், மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. கருப்பை வாய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்களும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க அத்தியாவசியமானவை என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us