ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றதாக சர்ச்சை – விராட் கோலி தரப்பில் விளக்கம்
Kohli Denies Money Claim : பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்குச் செல்வதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தவறானது மற்றும் ஆதாரமற்றது என விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பெயர் விராட் கோலி. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விராட் கோலி மீது சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்குச் செல்வதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தவறானது மற்றும் ஆதாரமற்றது என விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுரித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றதாக சர்ச்சைக்கு விராட் கோலி தரப்பில் விளக்கம்
விராட் கோலி பணம் பெற்றுக்கொண்டுதான் பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்குச் சென்றார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது. இதுகுறித்துப் பல்வேறு விவாதங்களும் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர், ஃபலஹாரி மகாராஜ் என்று அழைக்கப்படும் தினேஷ் சர்மா. ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் அறக்கட்டளையின் தலைவராகவும் அவர் இருக்கிறார்.
இதையும் படிக்க : IND vs WI: தரைக்கு மேல் பேட்.. ஹெட்மயர் அவுட்.. வைரலாகும் வீடியோ!




இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், விராட் கோலியை ஆசிரமத்துக்கு வரவழைப்பதற்காக ரூ.5 கோடி செலவிட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
2023 முதல் ஆசிரமப் பயணம்
விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்குச் சென்றார். அதன்பிறகு, இந்தத் தம்பதி அங்கு சென்று ஆன்மிகக் குருவைச் சந்திப்பது பலமுறை செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ஃபலஹாரி மகாராஜின் குற்றச்சாட்டு வெளியான நிலையில், விராட் கோலி தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தினேஷ் சர்மா கூறியுள்ள அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேமானந்த் மகாராஜ் மீது விராட் கோலி ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருப்பதாகவும், அந்த நம்பிக்கையின் காரணமாகவே அவரைச் சந்திக்கச் செல்வதாகவும் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இதில் எந்தவிதப் பணப் பரிவர்த்தனைக்கும் இடமில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதையும் படிக்க : IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப், ரூதர்போர்ட் அரைசதம்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதாகக் கூறிய செய்தித் தொடர்பாளர், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன் ஊடகங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உண்மைத்தன்மையைச் சரிபார்த்த பிறகே பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.