ரூ.2 கோடி மதிப்பிலான விராட் கோலியின் வாட்ச் – அப்படி என்ன ஸ்பெஷல்?
Virat Kohli’s Luxury Watch: மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி செப்டம்பர் 23, 2026 நேற்று திருவனந்தபுரம் வந்தார். இந்த நிலையில் அவர் அணிந்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான வாட்ச் கவனம் ஈர்த்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 27, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டயில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி செப்டம்பர் 23, 2026 நேற்று திருவனந்தபுரம் வந்தார்.
ரூ.2 கோடி மதிப்பிலான விராட் கோலியின் வாட்ச்
அப்போது அவருக்கு கேரளத்தில் உள்ள அவரது ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விராட் கோலிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் அப்போது விராட் கோலி அணிந்திருந்த வாட்ச் பெரிதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.




பாட்டெக் பிலிப் நாட்டிலஸ் 5811/1G-001 மாடல் வாட்ச்சை விராட் கோலி அணிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாட்ச்சானது நீல நிற சன்ரே டயல் மற்றும் கருப்பு நிற கிரேடியன்ட் டிசைன் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க : IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடர்.. திருவனந்தபுரம் வந்த கிங் கோலி!
பாட்டேக் பிலிப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த மாடலில் 41 மிமீ அளவிலான வெள்ளை தங்க கேஸ் மற்றும் அதே உலோகத்தால் செய்யப்பட்ட பிரேஸ்லெட் உள்ளது. இந்த கடிகாரத்தின் அதிகாரப்பூர்வ விலை 82,021 அமெரிக்க டாலர்கள் என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.70 லட்சத்துக்கும் மேல் என்றாலும், விராட் கோலி அணிந்திருந்த கடிகாரத்தின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடி வரை இருக்கும் கூறப்பட்டுள்ளது. நாட்டிலஸ் என்ற வெப் தொடரில் இடம்பெறும் இந்த மாடல், தானாக இயங்கும் காலிபர் 26-330 S C இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
வைரலாகும் விராட் கோலியின் வாட்ச் வீடியோ
View this post on Instagram
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்தியாவின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 27, 2026 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 2வது போட்டி செப்டம்பர் 30, 2026 அன்று கவுகாத்தியிலும், 3 வது போட்டி அக்டோபர் 3, 2026 நியூ சண்டிகரிலும் நடைபெறவுள்ளன. சுப்மன் கில் தேப்டனாக செயல்படும் இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் வீரர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : IPL 2027: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!
குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஆல்ரவுண்டர் நமன் தீர் ஆகியோர் முதன்முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து முதல் போட்டியில் அவர்கள் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.