AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!

IPL 2027 Auction: கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி போன்ற மூன்று சர்வதேச இடங்களில் ஐபிஎல் ஏலத்தை நடத்திய பிறகு, இந்த ஆண்டும் கோவாவில் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா கூறியுள்ளார்.

IPL 2027: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!
ஐபிஎல் 2027 ஏலம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2026 20:23 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2027) 2027 சீசனுக்கான ஏலம் இந்த 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவாஜித் சாய்கியா இன்று அதாவது 2026 செப்டம்பர் 23ம் தேதி அறிவித்தார். அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி போன்ற மூன்று சர்வதேச இடங்களில் ஐபிஎல் ஏலத்தை நடத்திய பிறகு, இந்த ஆண்டும் கோவாவில் ஏலம் நடைபெறும் என்றார். அதன்படி, பிசிசிஐ இந்த 2026ம் ஆண்டுக்கான ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் மாதம் கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2027 ஏலம் எப்போது? இந்தியாவில் இந்த முறை.. நடக்கப்போவது என்ன?

ஐபிஎல் 2027 ஏலம் எப்போது நடைபெறுகிறது..?


இதுதொடர்பாக ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் சவுதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளில் ஐபிஎல் ஏலத்தை நடத்திய நிலையில், இந்த 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் அதை நடத்தப் போகிறோம்” என்று கூறினார்.

இதற்கிடையில், தொடர் மழையின் காரணமாக வெளிக்களம் மற்றும் மைதானத்தின் தற்போதைய மோசமான நிலை காரணமாக, வருகின்ற 2026 செப்டம்பர் 29 முதல் 2026 அக்டோபர் 2 வரை நடைபெறவிருந்த இந்தியா ‘ஏ’ மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ மகளிர் அணிகளுக்கு இடையேயான பல நாள் போட்டி தர்மசாலாவிலிருந்து மொஹாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிசிசிஐ ஊடக வெளியீடு ஒன்றின்படி, இந்தப் போட்டி இப்போது மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறும். அங்குதான் இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற்று வருகிறது.

ALSO READ: சிஎஸ்கே அணியில் ஜாகீர் கான் முதல் சாய்ஸ் இல்லையா..? அஸ்வின் பகீர் தகவல்!

மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகவே போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர், தர்மசாலாவில் நிலவிய தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, தடையற்ற கிரிக்கெட் நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியாவது, “தர்மசாலாவில் கிரிக்கெட்டுக்கு வானிலை அவ்வளவு சாதகமாக இல்லாததால், வரவிருக்கும் டி20 போட்டிகளை நாங்கள் சமீபத்தில் தர்மசாலாவிலிருந்து மொஹாலிக்கு மாற்றினோம். அங்கு அதிக மழை பெய்கிறது. தர்மசாலாவில் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை காரணமாக கிரிக்கெட் நடவடிக்கைகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக, போட்டிகளை மொஹாலிக்கு மாற்ற முடிவு செய்தோம்” என்று கூறினார்.

Follow Us