AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: கேகேஆர் அணிக்கு ரிங்குவை ட்ரை பண்ணுங்க.. சுரேஷ் ரெய்னா சூப்பர் அட்வைஸ்!

Kolkata Knight Riders Captain: ரிங்கு சிங் தலைமையின் கீழ், மீரட் மேவரிக்ஸ் அணி உத்தரப் பிரதேச டி20 லீக் 2026 பட்டத்தை வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. தொடர் முழுவதும் மீரட் அணிக்காக இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தபோதிலும், ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

IPL 2027: கேகேஆர் அணிக்கு ரிங்குவை ட்ரை பண்ணுங்க.. சுரேஷ் ரெய்னா சூப்பர் அட்வைஸ்!
ரிங்கு சிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Sep 2026 19:11 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. முன்னதாக, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானே ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, ஐபிஎல் 2027-ல் (IPL 2027) கேகேஆர் அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆண்ட்ரே ரஸ்ஸல் 2026 சீசனுக்கு முன்பே ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் 2027-க்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா பரிமாற்றம் செய்யப்படுவது குறித்து பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது ரிங்கு சிங்கை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கொல்கத்தா அணி ரிங்கு மீது நம்பிக்கை வைத்து அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா (Suresh Raina) கூறுகிறார்.

ரிங்கு சிங் தலைமையின் கீழ், மீரட் மேவரிக்ஸ் அணி உத்தரப் பிரதேச டி20 லீக் 2026 பட்டத்தை வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. தொடர் முழுவதும் மீரட் அணிக்காக இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தபோதிலும், ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சனை கேப்டனாக்குங்கள்! முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

ரிங்கு சிங் கேப்டனா..?

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு கேப்டனைத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த அணி தனது கேப்டனைக் கண்டுபிடித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அணி நிர்வாகம் ரிங்கு சிங் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவருக்குப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற உ.பி. டி20 லீக் இறுதிப் போட்டியில் ரிங்கு சிங் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அவரது தலைமையின் கீழ் மீரட் மேவரிக்ஸ் அணி, லக்னோ ஃபால்கன்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேலும், 2024-ஆம் ஆண்டு சீசனையும் மீரட் மேவரிக்ஸ் அணி வென்றது.

இதுவரை கேகேஆர் அணிக்காக மட்டும் களம்:

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில், ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். தனது 73 போட்டிகள் கொண்ட ஐபிஎல் வாழ்க்கையில் ரிங்கு சிங் 1394 ரன்கள் எடுத்துள்ளார். ரிங்கு பெரும்பாலும் கீழ்-நடுவரிசையிலும், ஒரு ஃபினிஷராகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2026-ல், ரிங்கு சிங் கேகேஆர் அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் 295 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: ஆகஸ்ட் 15ம் தேதி நானும் ஓய்வு.. தோனி என்னை பார்த்து கேட்ட கேள்வி இதுதான்.. ரெய்னா ஓபன்!

கொல்கத்தாவின் ஐபிஎல் 2026 அணியில் வருண் சக்கரவர்த்தி, டிம் சீஃபர்ட், சுனில் நரைன், ரோவ்மன் பவல் மற்றும் மனிஷ் பாண்டே போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அஜிங்க்யா ரஹானேதான் அணிக்குத் தலைமை தாங்கினார். ரஹானே இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். தற்போதைய வீரர்களில், பவலுக்கு மட்டுமே சர்வதேச அளவில் கேப்டன் பதவி அனுபவம் உள்ளது. ஆனால், கொல்கத்தா அணி அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வாய்ப்பில்லை. ரிங்கு சிங் 8 ஆண்டுகளாக கேகேஆர் அணியுடன் இருக்கிறார். மேலும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், அவரிடம் கேப்டன் பதவியை தாராளமாக ஒப்படைக்கலாம் என பல முன்னாள் இந்திய வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us