AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MSD – Raina: ஆகஸ்ட் 15ம் தேதி நானும் ஓய்வு.. தோனி என்னை பார்த்து கேட்ட கேள்வி இதுதான்.. ரெய்னா ஓபன்!

Suresh Raina MS Dhoni Retirement: இன்றும், தோனியும் ரெய்னாவும் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் நட்பு ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தபோது, ​​தோனியின் முதல் கருத்து குறித்து சுரேஷ் ரெய்னா இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

MSD – Raina: ஆகஸ்ட் 15ம் தேதி நானும் ஓய்வு.. தோனி என்னை பார்த்து கேட்ட கேள்வி இதுதான்.. ரெய்னா ஓபன்!
சுரேஷ் ரெய்னா - எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Sep 2026 19:23 PM IST

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி எம்.எஸ். தோனி (MS Dhoni) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே, சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனியின் நட்பு பல ஆண்டுகள் ரசிகர்கள் பேசப்பட்டு வருகிறது. ரெய்னா மற்றும் தோனி பல ஆண்டுகளாக இந்திய அணியில் ஒன்றாக விளையாடியதுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் (Chennai Super Kings) கணிசமான நேரத்தை ஒன்றாகக் கழித்துள்ளனர்.

இன்றும், தோனியும் ரெய்னாவும் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் நட்பு ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தபோது, ​​தோனியின் முதல் கருத்து குறித்து சுரேஷ் ரெய்னா இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில், தன்னைப் போலவே ரெய்னாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தது தோனிக்கு அதிர்ச்சியளித்தது.

ALSO READ: சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக எம்.எஸ்.தோனி.. பயிற்சியாளராக இவரா?

ரெய்னா தனது ஓய்வு குறித்து விளக்கம்:

ஆகாஷ் சோப்ராவிடம் பேசுகையில், சுரேஷ் ரெய்னா கூறியதாவது, “ஒரு வீரராக, நீங்கள் இந்த விளையாட்டுக்காகவே வாழ்கிறீர்கள். இந்த நாட்டிற்காக நீங்கள் நிறைய செய்கிறீர்கள், இதற்குப் பின்னால் உங்கள் பெற்றோரின் தியாகம் உள்ளது. ஆனால் அந்தத் தருணத்தில் இதுதான் சிறந்த நேரம் என்று நான் உணர்ந்தேன். ஏனென்றால் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறீர்கள். அப்போது எனக்கு 32 அல்லது 33 வயது. தோனி ஓய்வு அறிவித்த பிறகு, நான் டிரெஸ்ஸிங் ரூம் சென்று, ‘இப்போது எல்லாம் முடிந்துவிட்டது’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘என்ன காரியம் செய்துவிட்டாய்?’ என்று கேட்டார்.

தோனி எனக்காக செய்த தியாகம்:

சுரேஷ் ரெய்னாவும் தனது வெற்றிக்கு எம்.எஸ். தோனி காரணம் என்றார். அதில், “ எனக்காக தோனி அவரது பேட்டிங் இடத்தை விட்டுக்கொடுத்தார். அதில், “அந்த நேரத்தில் நான் கேப்டனுக்காக விளையாடினேன், அணிக்காக விளையாடினேன் என்று நினைக்கிறேன். நான் கேப்டன் என்று சொன்னதற்குக் காரணம், எனக்குக் கிடைத்த பேட்டிங் இடத்திற்காக கேப்டன் தனது பதவியை விட்டுக்கொடுத்தார். தாதா (சௌரவ் கங்குலி) கேப்டனாக இருந்தபோது, ​​தோனி பேட்டிங்கில் முன்னே வந்து ஆடுவார், ஆனால் இவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ‘யுவராஜ் முன்னே வந்து ஆடுவார், சுரேஷ் நீங்கள் இங்கே ஆடுங்கள், நான் இங்கேயே இருப்பேன்’ என்று எனக்காக இடத்தை விட்டுகொடுத்தார்” என்று ரெய்னா கூறினார்.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சனை கேப்டனாக்குங்கள்! முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

கங்குலி கேப்டனாக இருந்தபோது, ​​தோனி பெரும்பாலும் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில்கூட பேட் செய்தார், ஆனால் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு, அவர் பெரும்பாலும் ஆறாவது இடத்தில்தான் பேட் செய்தார். தோனியின் அணுகுமுறை, இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இன்னும் அதிக முயற்சி எடுக்க தன்னை ஊக்குவித்ததாக ரெய்னா கூறினார்.

Follow Us