AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டில் சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாளில் முதலீட்டை திரும்ப பெறலாம்?

Solar Panel Cost: மின் கட்டணத்தை குறைக்க விரும்புகிறவர்களுக்கு சூரிய மின் சக்தியை சேமிக்கும் சோலார் பேனல்கள் மிகப்பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. சோலார் பேனல் அமைத்த பிறகு மின் கட்டணம் கணிசமாக குறைவதால், அதற்காக நாம் செலவிடும் முதலீட்டை படிப்படியாக திரும்பப் பெற முடியும்.

வீட்டில் சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாளில் முதலீட்டை திரும்ப பெறலாம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2026 19:50 PM IST

மின் கட்டணம் உயர்வு, மின் தடை போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர வர்கக்தத்தினர் கடுமையாக பாதிக்கின்றனர். இந்த நிலையில் வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க விரும்புகிறவர்களுக்கு சூரிய மின் சக்தியை சேமிக்கும் சோலார் பேனல்கள் மிகப்பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாதாந்திர மின் கட்டணத்தில் கணிசமான அளவில் குறையும். இதனால் மாதம் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமிக்க முடியும்.

சோலார் பேனல் அமைத்த பிறகு மின் கட்டணம் கணிசமாக குறைவதால், அதற்காக நாம் செலவிடும் முதலீட்டை படிப்படியாக திரும்பப் பெற முடியும். இருப்பினும், இந்த முதலீட்டை திரும்ப பெற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது அமைப்பின் திறன், நிறுவல் செலவு மற்றும் மாதாந்திர மின்சாரப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. பொதுவாக வீடுகளுக்காக 1kW, 3kW மற்றும் 5kW திறன் கொண்ட சோலார் மின் அமைப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மின் உற்பத்தித் திறனும், செலவும், பயன்பாடும் உள்ளது.

இதையும் படிக்க : Silver : மந்த நிலையில் வெள்ளி.. விலை குறைந்து முதலீடு செய்வதில் தயக்கம்.. காரணம் என்ன?

1kW சோலார் பேனல்

குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் சிறிய வீடுகளுக்கு 1kW சோலார் பேனல் பொருத்தமானதாக இருக்கும். ஒரு வீட்டில் மாதத்திற்கு சுமார் 120 முதல் 150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படும் என்றால், அந்த வீட்டுக்கு 1kW சோலார் பேனலை முயற்சிக்கலாம். 1kW சோலார் பேனலை நிறுவுவதற்கான மொத்த செலவு சுமார் ரூ.50,000 முதல் ரூ.55,000 வரை செலவாகலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் மானியம் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. அரசின் மானியம் கிடைக்கும் பட்சத்தில், சுமார் ரூ.30,000 வரை மானியம் வழங்கப்படலாம். இதனால், பயனாளி தனது சொந்த பணத்தில் சுமார் .ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவிட வேண்டியிருக்கும்.

1kW சோலார் அமைப்பை பயன்படுத்துவதன் மூலம் மாதத்திற்கு சுமார் .ரூ.800 முதல் ரூ.1,000 வரை மின்சாரக் கட்டணத்தை சேமிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதனை கணக்கில் எடுத்துக்கொண்டால் நமது முதலீட்டை சுமார் 3 முதல் 3.5 ஆண்டுகளில் திரும்ப பெற முடியும்.

இதையும் படிக்க : இறந்தவர்களின் அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

3kW சோலார் பேனல்

வீட்டில் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்தும் குடும்பம் என்றால் 3kW சோலார் பேனல் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 3kW திறன் கொண்ட சோலார் பேனல் சுமார் 360 முதல் 400 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனை நிறுவுவதற்கான மொத்த செலவு சுமார் .ரூ.1.40 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரை இருக்கும். இதில் அரசின் சார்பில் சுமார் ரூ.78,000 மானியம் கிடைக்கும் நிலையில், பயனாளி தனது பங்காக சுமார் .ரூ.62,000 முதல் ரூ.82,000. வரை செலுத்த வேண்டியிருக்கும். 3kW சோலார் அமைப்பை நிறுவிய பிறகு மாதாந்திர மின் கட்டணத்தில் சுமார் ரூ.2,220 முதல் ரூ.2,600 வரை மின் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை சேமிக்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்த 4 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்த தொகையை பெற முடியும்.

5kW சோலார் பேனல்

அதிக மின்சாரத் தேவையுள்ள வீடுகளுக்கு 5kW சோலார் பேனல் பொருத்தமானதாக இருக்கும். இதன் மூலம் சுமார் 20 முதல் 22 யூனிட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இரண்டு முதல் மூன்று ஏசிகள், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட அதிக மின்சாரம் பயன்படுத்தும் பொருட்களை இயக்குவதற்கு உதவியாக இருக்கும். 5kW சோலார் பேனலை நிறுவுவதற்கான மொத்த செலவு சுமார் ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.60 லட்சம். வரை இருக்கலாம். இதில் ரூ.78,000 மானியம் கிடைத்தால், பயனாளி தனது சொந்த பணத்தில் சுமார் .ரூ.1.52 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும். 5kW அமைப்பை நிறுவிய பிறகு மாதத்திற்கு சுமார் ரூ.3,500 முதல் ரூ.4,500. வரை மின் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் .ரூ.45,000. வரை சேமிக்க முடியும் எனக் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், 5kW சோலார் அமைப்புக்கான ஆரம்ப முதலீட்டை சுமார் 4 முதல் 5 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும்.

Follow Us