AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 1,240 சரிவு..

Chennai Gold and Silver Price: அக்டோபர் 22ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.14,438-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,504-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 1,240 சரிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Oct 2026 10:09 AM IST

அக்டோபர் 22, 2026: சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

அக்டோபர் 22ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.14,438-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,504-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த வெள்ளி விலை, இன்று மேலும் ரூ.5 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ETF முதலீடுகள்.. SEBI விடுத்த தற்காலிக தடை.. யார் யாரை பாதிக்கும்?

தங்கம் விலை சரிவு – நகை வாங்கலாமா?

தங்கம் விலை குறைந்திருப்பது மட்டுமே உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய காரணமாக இருக்காது. சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள், புவிசார் அரசியல் சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையைப் பாதிக்கலாம். நகை வாங்குபவர்கள் செய்கூலி, சேதாரம் மற்றும் வரிகள் உள்ளிட்ட மொத்தச் செலவைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

தங்கப் பத்திரங்கள்: என்ன சிறப்பு?

மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்கப் பத்திரங்கள், தங்கத்தின் விலையுடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்பாகும். இவற்றில் முதலீடு செய்யும்போது நேரடியாகத் தங்கத்தை வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க:  2026 இறுதிக்குள் ரூ.20,000-த்தை தொடுமா ஒரு கிராம் தங்கம்?.. நிலவரம் என்ன?

முதலீட்டின் மதிப்பு தங்கத்தின் சந்தை விலையைப் பொறுத்து உயரவோ குறையவோ செய்யும்.  இத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கு, அசல் முதலீட்டுத் தொகையின் மீது ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. பொதுவாக எட்டு ஆண்டுகள். விதிமுறைகளுக்கு உட்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட வட்டி வழங்கும் தேதிகளில் முன்கூட்டியே மீட்கும் வசதி உள்ளது. இருப்பினும், தங்கப் பத்திரங்களின் புதிய வெளியீடுகள் கிடைப்பது அரசின் அறிவிப்புகளைப் பொறுத்தது.

 

 

Follow Us