AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.. அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்!

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.. அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Oct 2026 13:18 PM IST

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் அரிசியில் எழுதி கல்வியைத் தொடங்கினர். விஜயதசமியை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அரிசியில் எழுத்தை எழுத வைத்து கல்வி தொடங்கி வைக்கப்பட்டது. விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த கல்வி அறிவைப் பெற்று விளங்குவார்கள் என்பது மலையாள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் அரிசியில் எழுதி கல்வியைத் தொடங்கினர். விஜயதசமியை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அரிசியில் எழுத்தை எழுத வைத்து கல்வி தொடங்கி வைக்கப்பட்டது. விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த கல்வி அறிவைப் பெற்று விளங்குவார்கள் என்பது மலையாள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில், விஜயதசமி நாளில் கோவில்களில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பங்கேற்றனர். நிகழ்ச்சியில், நம்பூதிரிகள் முன்னிலையில் குழந்தைகளின் விரல்களைப் பிடித்து, அரிசி நிரப்பப்பட்ட தட்டில் கடவுளின் பெயரையோ அல்லது முதல் எழுத்துகளையோ எழுத வைத்து எழுத்தறிவு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சில குழந்தைகள் எழுத்துகளை எழுதினர், சில குழந்தைகள் பயத்தில் அழுது அடம்பிடித்தனர்.

முன்னதாக, பெற்றோர் ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்து, தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எதிர்காலம் வளமாக அமையவும் வேண்டிக்கொண்டனர்.

Follow Us