AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்ன நடக்குது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆட்டம் சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று டாஸ்க் மட்டும் இன்றி டாஸ்கை தாண்டி பல நிகழ்வுகள் நடைப்பெற்று உள்ளது.

என்ன நடக்குது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
பிக்பாஸ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 10:50 AM IST

ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 100 நாட்களுக்கு அந்த நிகழ்ச்சி மட்டுமே சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த 2026-ம் ஆண்டு 10-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் முந்தைய சீசன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களை உள்ளே அனுப்புவதில் இருந்து அவர்கள் தங்களை போட்டியில் தக்கவைத்துக் கொள்வது என அனைத்தும் வித்யாசமான முறையில் இந்த சீசன் சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்களைக் கடந்து 46-வது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று 45-வது நாள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டாஸ்குகள் மட்டும் இன்றி போட்டியாளர்களிடையே சலசலப்பும் நிலவியது. சிவப்பு மற்றும் நீல நிற அணியினர் வாய் வாக்குவாதத்தில் மட்டும் இல்லாம பொருட்களை டேமேஜ் செய்வதையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்குது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில்?

அந்த வகையில் நீல நிற அணியினர் போட்டியில் வெற்றிப் பெற்று வாங்கி வைத்துள்ள நெய் கிட்சனில் இருந்தது. அதனை சிவப்பு அணியில் உள்ள முனியம்மா கீழே தள்ளிவிடுவதில் பிரச்சனை தொடங்கியது. இதனால் நீல அணியினர் சிவப்பு அணி தலைவர் அவினாஷிடம் புகார் கூற பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அவினாஷ் ஒருகட்டத்தில் கடுப்பாகி தோசைகல்லை கீழே போட்டு உடைத்துவிட்டு செல்கிறார். இந்த செயலைப் பார்த்த ரசிகர்கள் அவர் என்ன அவரது வீட்டில் இருக்கிறாரா. இப்படியான செயல் தவறானது என்றும் பார்க்கும் குழந்தைகள் எப்படி அதை எடுத்துகொள்வார்கள் என்றும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Also Read… பிக்பாஸில் சூடுபிடிக்கும் இந்த வாரம் டாஸ்க்… வைரலாகும் புரோமோ வீடியோ!

இப்படி ஒரு பக்கம் இருக்க இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சனி கிழமையை தவிற மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு முதல் புரோமோ வீடியோ, 12 மணிக்கு இரண்டாவது புரோமோ வீடியோ மற்றும் 3 மணிக்கு மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகி வந்தது. ஆனால் இன்று இதுவரை புரோமோ வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… Scene Movie: ஹபீபி கம் டூ துபாய்.. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அறிவிப்பு!

Follow Us