AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene Movie: ஹபீபி கம் டூ துபாய்.. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அறிவிப்பு!

Scene Movie Live Event: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் சீன். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Scene Movie: ஹபீபி கம் டூ துபாய்.. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அறிவிப்பு!
சீன் மூவி லைவ் ஈவென்ட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Oct 2026 14:15 PM IST

மலையாள சினிமாவில் ஆவேஷம் (Aavesham Movie) திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிராளமானவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan). இவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த இருபடம் இவருக்கு தென்னிந்திய மக்களிடையே பிரபலத்தை கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் இயங்கிவந்த புத்தம் புதிய திரைப்படம்தான் சீன் (Scene). இந்த படத்தில் தி ஒன் சூர்யா (The One Suriya) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துள்ளார். இந்த ஜோடியானது முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி இன்பராஜ் என்ற வேடத்தில் நடிக்க, நஸ்ரியா மாயா என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக இளம் நடிகர் நஸ்லென் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் அதை முன்னிட்டு, இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எப்போது, எங்கு நடைபெறுகிறது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அவ வரப்போறா… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வேர்ல்ட் ஆப் மஹாசக்தி வீடியோ வெளியானது!

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் லவ் ஈவென்ட் எப்போது – எங்கு நடக்கிறது:

நடிகர் சூர்யாவின் இந்த சீன் திரைப்படமானது அவரின் சொந்த புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்திற்கு பெரிதாக ஆடியோ லான்ச் எதுவும் நடத்த படக்குழு திட்டமிடவில்லையாம். அதற்கு பதிலாக லவ் ஈவென்ட் ஒன்றை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: யாரும் ராவணனாக நடிக்க விரும்புவதில்லை.. யாஷ் குறித்து பாராட்டி பேசிய சாய் பல்லவி!

இந்த சீன் திரைப்படத்தின் நிகழ்ச்சியை, துபாய் நாட்டில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதியில் மாலை 6 மணியளவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சிறப்பான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன் திரைப்படத்தின் லவ் ஈவென்ட் குறித்து படக்குழு அறிவித்த எக்ஸ் பதிவு:

இந்த சீன் திரைப்படமானது சூப்பர் அதிரடி மற்றும் குற்றம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம் என்ற நிலையில், இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படம் சூர்யாவுக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தெரிந்துகொள்ளலாம்.

Follow Us