தனது 2வது குழந்தைக்கு பெயரிட்டு புகைப்படத்தை பகிர்ந்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோன்!
Deepika And Ranveer Second Child Name: பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகள் மற்றும், மக்கள் கொண்டாடும் சிறந்த ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். இந்த தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், தசராவை முன்னிட்டு பெயரிட்டு குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தி சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் பேமஸான் நடிகையாக இருந்துவருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). இவர் தற்போது இயக்குநர் அட்லீ (Director Atlee) இயக்கத்தில் ராக்கா (Raaka) என்ற திரைப்படத்தில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். மேலும் இவர் கல்கி 2 படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். அந்த விதத்தில் ராக்கா படத்தின் ஷூட்டிங்கின்போதே தான் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நடிகை தீபிகா படுகோன் அறிவித்திருந்தார். தனது மூத்த மகள் துவாவுடன் (Dua) இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். இந்த 2026ம் ஆண்டில் நடிகரும், தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கிற்கும் (Ranveer Singh) பிரமாண்ட வெற்றியாக துரந்தர் 2 (Dhurandar 2) படமானது அமைந்தது.
அந்த வெற்றிக்குப் பின் தான் 2வது முறையாக தந்தை ஆகப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதியில் 2வது பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் நேற்று (20/10/2026) தசரா பண்டிகையை முன்னிட்டு, தங்களின் 2வது மகளுக்கு பெயரிட்டு குடும்ப புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.




இதையும் படிங்க: ரா ரா ரா ராவணா… ராமாயணா படத்திலிருந்து வெளியான ‘ராவண தாண்டவம்’ பாடல்!
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனின் 2வது மகளின் பெயர்:
இந்த தம்பதியினர் தங்களின் மூத்த பெண் குழந்தைக்கு துவா என பெயரிட்டிருந்த நிலையில், தசராவை முன்னிட்டு தங்களின் 2வது பெண் குழந்தைக்கும் பெயர் வைத்துள்ளனர். தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினர், தங்களின் 2வது பெண் குழந்தைக்கு “தேவி படுகோன் சிங்” (Devi Padukone Singh) என பெயரிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: யாரும் ராவணனாக நடிக்க விரும்புவதில்லை.. யாஷ் குறித்து பாராட்டி பேசிய சாய் பல்லவி!
இது தொடர்பான பதிவை தங்களின் இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவில் குடும்பமாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் மற்றும் அவர்களின் குழந்தைகள் இருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
தீபிகா படுகோன் மற்றும் ரன்பீர் சிங் தம்பதியினர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
நடிகை தீபிகா படுகோன் தற்போது இந்தியில் கிங் மற்றும் தெலுங்கில் ராக்கா போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்த படங்களின் ஷூட்டிங்கின்போதே கர்ப்பமான நிலையில், இந்த இரு படத்தின் ஷூட்டிங்கிலும், தனது காட்சிகளை கிட்டத்தட்ட 80 சதவீதம் அவர் முடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ராக்கா படத்தில் மட்டும் இவரின் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவேண்டியிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படங்களின் ஷூட்டிங்கில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.