AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராக்கா படத்தில் அதிரடியாக ஆக்‌ஷன் நாயகியாக நடிக்கும் தீபிகா படுகோன் – வைரலாகும் தகவல்

Raaka Movie Shooting Update: தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது ராக்கா படம். இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடித்து வருகிறார். இவரது ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்படுகின்றது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

ராக்கா படத்தில் அதிரடியாக ஆக்‌ஷன் நாயகியாக நடிக்கும் தீபிகா படுகோன் – வைரலாகும் தகவல்
ராக்காImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 10:38 AM IST

கன்னட சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை தீபிகா படுகோன். இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அடுத்த ஆண்டே இந்தி சினிமாவில் நடிகர் ஷாருக் கானுக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் அடித்தார். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை தீபிகா படுகோனே. தொடர்ந்து இந்தி சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை தீபிகா படுகோன் தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு இந்தி சினிமாவில் படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் கிங் மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா என இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ராக்கா படத்தில் நடிகை தீபிகா படுகோனின் கதாப்பாத்திரம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

ராக்கா படத்தில் தீபிகா படுகோனுக்கு டூப் போடும் படக்குழு:

அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் ‘ராக்கா’ திரைப்படத்தில், நடிகை தீபிகா படுகோனின் அதிரடியான சண்டைக் காட்சிகள், சில அபாயகரமான சாகசங்களுக்காக ஒரு பாடி டபுளைப் பயன்படுத்தி படமாக்கப்பட உள்ளன. தீபிகா முக்கிய நடிப்பையும் முக்கிய தருணங்களையும் முன்னிறுத்தினாலும், தொழில்முறை சண்டைக் காட்சிகளைக் கோரும் தீவிரமான, பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, படத்தில் அவருக்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை மட்டும் தராமல், முழுமையான சக்தி வாய்ந்த, அதிரடி நிறைந்த ஒரு பிரம்மாண்டமான கதாபாத்திரம் அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… கருப்பு படத்தை பார்த்தவர்கள் இதுதான் சொன்னார்கள்… நடிகர் சூர்யா கொடுத்த அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு உருகுற மனசு தான் கடவுள் – தனுஷ் பேச்சு

Follow Us