Deepika Padukone: ஹேப்பி நியூஸ் சொன்ன தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Deepika Padukone Second Pregnancy: பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களாகவும், ஜோடியாகவும் இருந்துவருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். இந்த ஜோடியானது இந்தி சினிமாவை கடந்து, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்தி சினிமாவில் புகழ்பெற்ற காதல் ஜோடிகளாக இருந்துவருபவர்கள் ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் தீபிகா படுகோன் (Deepika Padukone). இவர்கள் இருவரும் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடியாக இருந்துவருகின்றனர். இவர்கள் இருவருமே கடந்த 2018ம் ஆண்டிலே இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் இவர்களுக்கு “துவா” (Dua) பெண் குழந்தை பிறந்தது. இந்த ஜோடியானது திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை. நடிகை தீபிகா படுகோனு படங்களில் லீட் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். மேலும் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பிலும் சமீபத்தில் வெளியாகியிருந்த துரந்தர் 1 (Dhurandar 1&2) மற்றும் பார்ட் 2 படங்களானது, பான் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிப்பதிலும், ஆர்வம் காட்டிவருகிறார்.
அந்த வகையில் இவ்வாறு சினிமாவில் படங்களில் தீவிரமாக இருக்கும் இந்த ஜோடி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளது. ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி 2வது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளது. இது தற்போது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.




இதையும் படிங்க: சிறப்பான நடிகை.. கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்கவைக்க காரணம் இதுதான் – ஆர்.ஜே.பாலாஜி!
நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில், அவர்களின் மகள் துவா கையில், கர்ப்பம் கண்டறியும் கருவியை வைத்திருக்கும் விதத்திலான புகைப்படத்தை இந்த தம்பதியினர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர்கள் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதை தெளிவாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த பதிவின் கீழ் பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள் என பாராட்டுகளையும் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர்? அட இவர்தான்!
நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் தொடந்து நாயகியாக நடித்துவருகிறார். இவர் தற்போது இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் உருவாகிவரும் ராக்கா என்ற படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துவரும் நிலையில், தீபிகா படுகோன் ஆக்ஷன் நாயகியாக நடித்துவருகிறாராம். நடிகை தீபிகா படுகோன் தனது முதல் கர்ப்பத்தின்போதுதான், பிரபாஸுடன் கல்கி2898ஏடி படத்தில் நாயகியாக நடித்துவந்தார். அந்த படத்திலும் அவர் கர்ப்பமாக இருப்பதுபோன்ற வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது 2வது முறை கற்பமாகியிருக்கும் நிலையில், அல்லு அர்ஜூனுடன் ராக்கா படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.