நடிகை தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை – இயக்குநர் அட்லி
Atlee about Deepika Padukone: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். இந்த நிலையில் அட்லி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த அட்லி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று மக்கள் கொண்டாடும் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு இயக்குநராக மாறியவர் இயக்குநர் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் உடன் மூன்று முறை கூட்டணி வைத்தார். அந்த கூட்டணி மாபெரும் வெற்றியை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்த இயக்குநர் அட்லி தொடர்ந்து பாலிவுட்டில் காலடி வைத்தார்.
அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் வெளியான படம் ஜவான். இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் அட்லி அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை:
AA22xA6 படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நாங்கள் புதிதாக ஒன்றைக் கண்டறிந்து வருகிறோம். ஒரு புதுப்பிப்பை வழங்குவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாங்கள் ஏதோ ஒன்றைத் தயாரித்து வருகிறோம், என்னை நம்புங்கள். நீங்கள் அதை முழுமையாக ரசிக்கப் போகிறீர்கள். தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை. தாய்மைக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது, நீங்கள் ஒரு மாறுபட்ட தீபிகாவைக் காணப் போகிறீர்கள் என்று அந்தப் பேட்டியில் இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அனிமல் படத்தின் பார்ட் 2 எப்போது தொடங்கும் – நடிகர் ரன்பீர் கபூர் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் இயக்குநர் அட்லி பேச்சு:
#Atlee Recent
– Every day, we are discovering something. I am aware of how everyone wants to hear about the film.
– And honestly, more than my audience, I am really waiting to tell them everything. We are spending sleepless nights working on it.#AA22xA6pic.twitter.com/xNsbjGAJPJ— Movie Tamil (@_MovieTamil) January 27, 2026
Also Read… ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் விடீயோ