Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓர் ஆண்டை நிறைவு செய்தது குடும்பஸ்தன் படம்… நாயகி வெளியிட்ட உணர்வுபூர்வமான பதிவு

One Year of Kudumbasthan Movie: தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குடும்பஸ்தன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் நடிகை சான்வி மேக்னா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓர் ஆண்டை நிறைவு செய்தது குடும்பஸ்தன் படம்… நாயகி வெளியிட்ட உணர்வுபூர்வமான பதிவு
குடும்பஸ்தன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jan 2026 16:46 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு சின்ன சின்ன பட்ஜெட்டில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எந்தவிதமான மாஸ் எலமெண்ட்ஸ்களும் இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் ரசிகர்களிடையே நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி இருந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சான்வி மேக்னா நாயகியாக நடித்து இருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு குழம்பு வைக்கும் செய்முறையை வைத்து ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாகிறான் என்று அந்த ட்ரெய்லரில் காட்டியிருந்தது ரசிகர்களிடையே வித்யாசமான அனுபவத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குடும்பஸ்தன் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்ததைத் அடுத்து நடிகை சான்வி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனது முதல் ப்ளாக்பஸ்டர் குடும்பஸ்தன் படம்:

அந்தப் பதிவில் நடிகை சான்வி கூறியதாவது, நான் எனது பயணத்தை சில தெலுங்குப் படங்களுடன் தொடங்கினேன், அந்த அன்பிற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஒவ்வொரு படத்திலும் நான் வளர்ந்திருக்கிறேன்.

இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு கிடைத்த அனைத்து பாராட்டுகளுக்கு மத்தியிலும், நான் ஒரு உண்மையான திருப்புமுனைக்காகக் காத்திருந்தேன். அந்தத் தருணம் ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் கிடைத்தது. அதுவே எனது முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம்.

நான் 2016 முதல் நடித்து வருகிறேன், இந்தத் திரைப்படம் நான் எதிர்பார்த்த அனைத்தையும் எனக்கு வழங்கியது. திரையரங்குகள் முதல் ஓடிடி வரை, தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும், மக்களிடமிருந்து, குறிப்பாகப் பெண்களிடமிருந்து நான் தொடர்ந்து பெறும் அன்பும் மரியாதையும் உண்மையிலேயே மிகவும் சிறப்பானது.

தற்போது, ​​நான் இரண்டு அற்புதமான குழுக்கள், சிறந்த எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சக நடிகர்களுடன் பணிபுரிந்து வருகிறேன். இந்த 2026 ஆம் ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இதுவும் ஒரு ஆரம்பம் போல இருக்கிறது. நன்றி. எப்போதும் நன்றியுடன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது – கென் கருணாஸ் ஓபன் டாக்

நடிகை சான்வி மேக்னா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன் – வைரலாகும் வீடியோ