AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன் – வைரலாகும் வீடியோ

Parasakthi Movie Deleted Scene: தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில் இருந்து டெலீடட் காட்சியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன் – வைரலாகும் வீடியோ
பராசக்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jan 2026 20:22 PM IST

தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த பொங்கல் ரேசில் திரையரங்குகளில் வெளியா படங்களில் பராசக்தி படமும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த பராசக்தி படம் தமிழ் நாட்டில் அறுபதுகளில் நடைப்பெற்ற இந்தி திணிப்பிற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்தப் படம் 60களில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் செட் அப்படியே அமைக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்தில் போடப்பட்டுள்ள செட் அப்படியே வோல்ட் ஆஃப் பராசக்தி என்ற பெயரில் கண்காட்சியாக அமைக்கப்பட்டது. அதனை மக்கள் மிகவும் பிரமிப்பாக பார்த்து சென்றது குறிப்பிடத்தக்கது.

படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்த செட்டைப் பார்த்து மிரமித்தனர் மக்கள். அதனைத் தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் திரையரங்குகளில் பராசக்தி படம் வெளியான போது மக்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. படத்தின் விமர்சனம் கலவையாக இருந்தாலும் வசூலில் படம் 100 கோடிகளை கடந்ததாக நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன்:

இந்த நிலையில் இந்த பராசக்தி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் அதர்வா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் மொழி திணிப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் பேசுவது போல உள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026-ல் தேர்வானது சூரரைப் போற்று படம்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Parasakthi: தொடர் வெற்றி… ரூ.100 கோடி வசூலை கடந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி!

Follow Us