இது லேட்டஸ்ட் வந்தே மாதரம்… குடியரசு தின 2026 அணிவகுப்பில் இசையமைக்கும் கீரவாணி..
Oscar-winner M.M. Keeravani: பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் எம்.எம்.கீரவாணி. ஆஸ்கர் விருதை வென்ற இவர் 2026-ம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பிற்கான இசையை அமைக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி. இவர் கடந்த 1990-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான மனசு மமதா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பலப் படங்களில் இசையமைத்து வந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, பிரதாப், ஹீரோ, கொண்டாட்டம் என பலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் தெலுங்கு சினிமாவில் மட்டும் முன்னணி இசையமைப்பாளராக இல்லாமல் பான் இந்திய அளவில் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து தனது இசைக்காக பல விருதுகளைப் பெற்ற எம்.எம்.கீரவாணி கடந்த 2022-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் இசையமைத்ததற்காக ஆஸ்கர் விறுதைப் பெற்றார். இது தெலுங்கு சினிமாவிற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.




குடியரசு தின 2026 அணிவகுப்பில் இசையமைக்கும் கீரவாணி:
இந்தியாவில் வருகின்ற ஜனவரி மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த 2026 குடியரசு தின அணிவகுப்பிற்கான இசையை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி அமைக்கவுள்ளார். அதில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதிலுமிருந்து 2500 கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமான படைப்பு அரங்கேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது – நடிகை பாவனா ஓபன் டாக்
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Dear all,
Vande Mataram!On the occasion of the 150th anniversary of the iconic song Vande Mataram, I feel deeply honoured and privileged to have composed the music for the 26th January Republic Day Parade, under the aegis of the Ministry of Culture.
This grand presentation will…— mmkeeravaani (@mmkeeravaani) January 19, 2026
Also Read… ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இல்லனா பரவாயில்லை… யூடியூபில் இந்த 8 A.M. மெட்ரோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்!