துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் அறிமுக நடிகை.. ரசிகர்களிடையே வைரலாகும் கிளிம்ப்ஸ்!
Aakasamlo Oka Tara Movie: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஆகாசம்லோ ஓக தாரா. இந்த படத்தில் அறிமுக நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவரின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகிவருகிறது அந்த வகையில் தெலுங்கு இயக்குநர் பவன் சத்தினேனி இயக்கத்தில் இவர் நடித்துவரும் படம்தான் ஆகாசம்லோ ஓக தாரா (Aakasamlo Oka Tara). இந்த படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தில் துல்கர் சல்மான் லீட் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதை சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து ஏற்கனவே துல்கர் சல்மானின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகை சாத்விகா வீரவள்ளி (Satvika Veeravalli) நடித்துள்ளாராம். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!
ஆகாசம்லோ ஓக தாரா படத்தின் கதாநாயகி அறிமுகம் குறித்த வீடியோ பதிவு :
She carries a dream bigger than the sky….
Introducing Satvika Veeravalli – The dreamer who gives wings to #AakasamLoOkaTara ❤️🔥
▶️ https://t.co/XoK293KipS#AOTMovie@pavansadineni @GeethaArts @SwapnaCinema @Lightboxoffl @satveeravalli @gvprakash @grajug @sunnygunnam… pic.twitter.com/pOLP6WEiOH
— Dulquer Salmaan (@dulQuer) January 19, 2026
துல்கர் சல்மானின் இந்த திரைப்படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிவிப்புகளை கடந்த 2024ம் ஆண்டு துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இந்த படத்தை இயக்குநர் பவன் சத்தினேனி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சாவித்ரி, இஷ்க் காதல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் AA23.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
இந்த படமானது எப்போது வெளியாகவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் படம் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் கதாநாயகி அறிமுக வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. நடிகர் துல்கர் சல்மானை தொடர்ந்து அறிமுக நடிகைகளை தனது படங்களில் இணைத்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.