இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், சனிக்கிழமை இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்திலும் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன. விமான நிலையத்தின் தரைப்பரப்பில் இருந்த சில விமானங்கள் தீப்பற்றியதாகவும், வெடிப்புகளால் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.