கமல் ஹாசனின் பிறந்த நாளில் தொடங்கும் அவரது புதுப் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
Actor Kamal Haasan New Movie Shooting Update | நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan). இவரை உலக அளவில் அவரது ரசிகர்கள் உலக நாயகன் என்று கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பாடல்களை எழுதுவது, பாடல்களைப் பாடுவது, படங்களை தயாரிப்பது, படங்களை இயக்குவது என பல துறைகளிலும் பணியாற்றி உள்ளார். இவர் எந்த அளவிற்கு நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறாரோ அதே அளவிற்கு படங்களின் பின்புறம் நடைபெறும் தொழில்நுட்ப வேலைகளையும் செய்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். அது மட்டும் இன்றி சினிமா தொடர்பான படிப்புகளை இந்த வயதிலும் எந்த நாட்டிற்கும் சென்று படிப்பதில் அதிக அளவில் முனைப்பு காட்டி வருகிறார் நடிகர் கமல் ஹாசன்.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு தக் லைஃப் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் இவர் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கிறார், அது எப்போது தொடங்கும் என்பது குறித்தும் அதிக அளவில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கமல் ஹாசனின் பிறந்தநாளில் தொடங்கும் அவரது புத படத்தின் ஷூட்டிங்:
கமல்ஹாசன் மற்றும் எஸ்.யு. அருண் குமார் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதியன்று செங்கல்பட்டில் தொடங்குகிறது. அங்கு மதுரையின் சூழலை ஒத்த அமைப்புகளைக் குழுவினர் உருவாக்கவுள்ளனர். நவம்பர் 20-ஆம் தேதியிலிருந்தும் சில நாட்களுக்குச் செங்கல்பட்டில் படப்பிடிப்பு தொடரும். மதுரையின் சூழலுக்குப் பொருத்தமான மேலும் சில காட்சிகள் அங்கு படமாக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு மதுரையிலேயே முழுவீச்சிலான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஒட்டுமொத்தப் படமும் நிறைவு செய்யப்படும்.
Also Read… டிடிஃஎப் வாசனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. கூட்டு சேர்ந்து பேசிய அவினாஷ் – ஜேசன்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KamalHassan x #SUArunkumar film shooting starts from November 7th, on #KamalHassan’s birthday itself, in Chengalpattu, where the team will recreate the Madurai landscape.
The shoot will continue on November 20th for a few days at Chengalpattu, where the team will shoot a few more portions matching the Madurai landscape. Following this, the team will begin a single-stretch, full-fledged schedule in Madurai itself after Pongal next year and wrap up the entire film.
A Madurai-based commercial film loading by #KH🔥
Source – Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) November 3, 2026



