Suriya: சூர்யாவின் சீன் திரைப்படத்தின் தமிழக FDFS எப்போது தெரியுமா?
Scene Movie FDFS: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமா எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் சீன். இந்த படத்தில் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்த படமானது 2026 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் FDFS காட்சிகள் எப்போது என விவரமாக பார்க்கலாம்.
ரசிகர்கள் “தி ஒன்” (The One) என மகிழ்ச்சியுடன் அழைக்கப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர்தான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் மொழியில் புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) திரைப்படமானது வெளியாகி பான் இந்திய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் மலையாள இயக்குநர் ஜித்து மாதவனுடன் (Director Jithu Madhavan) சூர்யா47 படத்தில் இணைந்திருந்தார். அந்த படத்திற்கு படக்குழு சீன் (Scene Movie) என டைட்டில் வைத்திருந்தது. இந்த படத்தில் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துள்ளார்.
இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 06ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் FDFS காட்சிகள் தமிழகத்தில் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: பிக் பாஸ் லக்ஸூரி பட்ஜெட் ஷாப்பிங்.. முனியம்மாளால் கலகலப்பு – வைரலாகும் ப்ரோமோ!
சூர்யாவின் சீன் திரைப்படத்தின் FDFS விவரங்கள்:
இந்த சீன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படமானது கலக்கல் காமெடி மற்றும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யாவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகும் 3வது திரைப்படமாகும்.
இதையும் படிங்க: RC17 படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!
அந்த வகையில் இப்படத்தின் FDFS எப்போது இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இப்படத்தின் FDFS தமிழகத்தில், நவம்பர் 6ம் தேதி காலை 6 மணி முதல் திரையிடப்படுகிறதாம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
சூர்யாவின் சீன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Watch the #SCENE Trailer Now in Tamil, Telugu & Hindi! 🧨
Tamil- https://t.co/vbPDm6zBPS
Telugu – https://t.co/Lmzhu86YRO
Hindi – https://t.co/0JF7bP8zit
In cinemas worldwide from November 6! #DiwaliRelease 💥
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @RakenduMouliv @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 2, 2026
இந்த சீன் திரைப்படத்தில் சூர்யாவுடன், நஸ்ரியா, நஸ்லேன், லால், ராஜ்ப்ரியன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக அமைக்கப்பட்டள்ளது. இந்த படம் 2026ம் நவம்பர் 6ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சிறப்பாக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.