AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வெளியானது டேர்டெவில் படத்தின் பூஜை போட்டோஸ்

Ajith Kumars Daredevil Movie Pooja Photos | நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் பெயர் டேர் டெவில். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இணையத்தில் வெளியானது டேர்டெவில் படத்தின் பூஜை போட்டோஸ்
டேர்டெவில் பட பூஜைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Nov 2026 16:53 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் படத்தின் தயாரிப்பாளர் முடிவாவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்தப் படம் தொடங்கவே ஒரு வருடத்திற்கு மேலாக ஆனது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்தப் படத்தை அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்தப் படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் படத்தினை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்க உள்ளார். இவர் தான் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் வெளியானது டேர்டெவில் படத்தின் பூஜை போட்டோஸ்:

தொடர்ந்து டேர்டெவில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. இதில் அஜித்குமாரின் மனைவியும் தயாரிப்பாளருமான ஷாலினி, அவர்களின் மகன் ஆதிக் மற்றும் நாயகி ஸ்ரீலீலா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் என்ன நடக்குது? இந்த வாரம் எவிக்டாவது யார் தெரியுமா – வைரலாகும் தகவல்

சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது… சுட சுட தயாராகும் அப்டேட் – வைரலாகும் பதிவு!

Follow Us